ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை திறந்து வைத்து விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் கொரோனா வைரஸ் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் ஆம்பூர் பகுதியில் கொரோனா தொற்று 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில்மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்நிலையில் இன்று ஆம்பூர் தனியார் மேல்நிலை பள்ளி மைதானத்தில் இன்று முதல் உழவர் சந்தை செயல்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப. சிவன அருள் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் விற்பனையை தொடங்கி வைத்தனர் இந்நிலையில் தனியார் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தை காய்கறி பட்டியல்களை பார்வையிட்ட பின்னர் அங்கு உள்ள கடையில் கடலெண்ணெய் பெற்றுக்கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் இதில் ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் சௌந்தர்ராஜன் ஆம்பூர் வட்டாட்சியர் செண்பகவள்ளி மற்றும் அதிகாரிகள் உடன் உள்ளனர்
அதன் பின்னர் உமராபாத் தனியார் கல்லூரிக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு அதன் பின்னர் அங்கு பணியில் உள்ளவர்களுக்கு அறிவுரை வழங்கினார்